தலைவர் ச.ஜெயகுமார் அவர்கள் அழைக்கிறார் லஞ்சம் ஊழலுக்கும் எதிராக ஒன்றுபடுவோம் /

நமது கொள்கைகள்

showcase image

1) இளைஞர்களை முன்னிறுத்தி புதியதோர் அரசியல் செய்வோம்!

2) புதிய அரசியல் பாதையில், சுயநலமற்ற, நேர்மையான, சமூக சிந்தனையோடு என்றும் மக்கள் சேவையில் ஈடுபடுவோம்!

3) நாட்டில் சாதி மத பாகுபாடின்றி, நாட்டு மக்கள் ஒற்றுமையாய் வாழ வழிவகை செய்வோம்!

4) சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து தமிழனாய் ஒன்றிணைவோம்! தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்போம்!!

5) பொருளாதார ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயம் அமைய பாடுபடுவோம்.

6) சாமானிய மக்களும் பயன் பெரும் வகையில் தரமான மருத்துவம் மற்றும் கல்வியை இலவசமயமாக்குவோம்.

7) பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றத்தை உறுதிபடுத்துவோம்.

8) ஆண்களுக்கும் நிகராக பெண்களும் அரசியல் களம் காண வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான முக்கியத்துவத்தை அவர்களுக்கு அளிப்போம்.

9) மாநிலங்கள் அனைத்திற்கும் சுய ஆட்சி தன்னாட்சி ஆதிகாரம் கிடைக்க பாடுபடுவோம். ஆதற்கான சட்ட திருத்தம் கொண்டுவர பாடுபடுவோம்.

10) தமிழ் மொழியை எங்கும் வாழவைப்போம்! தமிழனை எங்கும் ஆளவைப்போம்!!

11) இயற்கைக்கு முறனற்ற கண்டுபிடுப்புகளை ஊக்குவிப்போம்.

12) உலக தமிழர்களை சாதி மத பாகுபாடு இன்றி ஒன்றிணைத்து தமிழர் உரிமைகள் கிடைத்திட தமிழர் உரிமைகளை போராடி வென்றிட என்றும் பாடுபடுவோம்.

13) ஏழை சாமானிய அரசை உருவாக்குவோம்.

14) அவரவர் தாய்மொழி கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

15) தமிழை ஆட்சி மொழியாக, தமிழை கற்கும் மொழியாக, தமிழை பேசும் மொழியாக, தமிழை பண்பாட்டு மொழியாக, தமிழை வழிபாட்டு மொழியாக, தமிழை வழக்காடு மொழியாக, மாற்றிடுவோம்.

16) தாய்மொழியில் கல்வி கற்றோருக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிப்போம்.

17) அரசு வேலை வாய்ப்பில் அந்த அந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

18) மறுமலர்ச்சி ஜனதா கட்சி எந்த ஒரு மத சமய நம்பிகையிலும் தலையிடாது. எந்த ஒரு சமயத்தையும் ஏற்ற தாழ்வுடன் கருதாது. ஜாதி மதங்களை கடந்து தமிழனாய் ஒன்றிணைய முயற்சிப்போம்.

19) இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவோம். அழிந்து வரும் பயிரினங்களை கண்டெடுத்து பாதுகாப்போம்.

20) நீர் நிலைகளை பாதுகாப்போம். நதி நீர் இணைப்பை உறுதிபடுத்துவோம்.தடுப்பணைகளை அதிக்கப்படுத்துவோம்.அனைவர்க்கும் தூய்மையான குடிநீர் வழங்க முயற்சிப்போம் .குடிநீர் வாணிகமையமாவதை தடுப்போம்.

21) இயற்கை வளங்களை பாதுகாப்போம். காடுகள் ஆழிக்கப்படுவதை தடுப்போம் .வன விலங்கு பாதுகாப்பை உறுதிசெய்வோம்.

22) வனங்கள் மற்றும் விவசாய நிலங்களை பாதுகாப்போம்.

23) தொழிலாளர்கள் முன்னேற்றம் மற்றும் நாட்டின் தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்துவோம்.

24) ஊழலற்ற ஆட்சி நிர்வாகம் அமைப்போம்.

25) ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு சுய உதவி குழுக்கள் அமைத்து அவர்களின் அடிப்படை தேவைகள், வேலைவாய்ப்பு, செய்முறை தொழிற் பயிற்சி மற்றும் அவர்கள் ஒற்றுமையை உறுதி செய்வோம்.

26) பாரம்பரிய இந்திய மற்றும் தமிழ்நாட்டின் கலாசாரங்களை பேணி காப்போம். கலை, இலக்கியம், காவியம், நடனம், ஓவியம், சிற்பக்கலை ஆகியவற்றை பாதுகாப்பதோடு அவற்றின் முன்னேற்றத்தையும் உறுதிசெய்வோம்.

27) பாரம்பரிய தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம், களரி, ஜல்லிக்கட்டு போன்ற வீர விளைட்டுகள் பற்றி வளரும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வோம்.

28) தமிழர் பண்பாடு மற்றும் சுற்றுலா துறையை மேம்படுத்த படித்த இளைஞர்கள் மற்றும் உலக தமிழர்களை ஒன்றிணைத்து துறையை விரிவுபடுத்துவோம்.

29) கிராமப்புற நடனம், கிராமிய இசை ஆகியவற்றையும் அதை சார்ந்த தொழிலார்கள் பாதுகாப்பையும் உறுதி செய்வோம்.

30) மீனவர்களின் நலன், அவர்களின் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, இயற்கை விவசாயம் ஆகியவற்றில் பாதுகாப்பான புதிய தொழில்நுட்பத்தை புகுத்த ஏற்பாடு செய்வோம்.

31) புவிசார் கடல் சார் ஆராய்ச்சிகளை மேம்படுத்துவோம். வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்துவோம்.

32) வாக்களிக்க மக்களுக்கு உரிமை உள்ளதுபோல் வாக்கை திரும்ப பெரும் ஆதிகாரம் மக்களுக்கு வழங்க அதிகாரம் கொண்டுவரப்படும். அதற்கான சட்ட திருத்தும் கொண்டுவருவோம்.

33) பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் தேர்வு செய்யும் முறையை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் சட்ட திருத்தம் கொண்டுவருவோம்.

34) மக்களால் தேர்ந்துதெடுக்கப்படாத மேலவை கலைக்கப்படும். மக்களால் தேர்வு செய்யாத நியமனம் உறுப்பினர்கள் தடை சட்டம் கொண்டுவரப்படும்.

35) தனியார் ஓட்டுநர் நல வாரியம் அமைப்போம்.